ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
Search This Blog
Wednesday, July 25, 2018
Comments:0
பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.