சிபிஎஸ்சி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் இன்றி, பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிபிஎஸ்சி பள்ளிகள் திறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. ஆனால் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களுக்கான புத்தகங்கள் அனைவருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. பள்ளிகளும் சிபிஎஸ்சி புத்தகங்களுக்காக பதிப்பாளர்களை, பெற்றோர்களிடம் கூற மறுக்கின்றன. பள்ளிகளில் புத்தக இருப்பு வரும் வரை காத்திருக்க வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக பேசிய சிபிஎஸ்சி 11ஆம் வகுப்பு மாணவரின் தந்தை எம்.பாஸ்கர், கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும், பாடப்புத்தகங்கள் கிடைக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இது நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறை போலத் தோன்றுகிறது. கடந்த ஒருமாதமாக எனது மகனுக்கு வர்த்தகப் பிரிவு பாடப் புத்தகம் வாங்க முயற்சித்து வருகிறேன். ஆனால் பள்ளி நிர்வாகிகள் ‘இல்லை’ என்று தொடர்ந்து பதில் கூறி வருகின்றனர். ஒருவேளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின்( NCERT) புத்தகங்கள் கிடைக்கவில்லை எனில், வேறு சில பதிப்பாளர்களைக் கூறினால் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை என்று கூறினார்.
சில பெற்றோர்கள் கூறுகையில், வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவு புத்தகங்கள் கிடைப்பதில் தான் முக்கியப் பிரச்சனை நிலவுகிறது. அறிவியல் பாடப்பிரிவு புத்தகங்கள் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரிவித்தனர். சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை ரவி குமார் கூறுகையில், என்.சி.ஆர்.டியின் அக்கவுண்டிங் மற்றும் பொருளாதாரப் பிரிவு பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. ஆனால் பள்ளி வேறு சில பதிப்பகத்தாரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளன என்று கூறினார்.
Kaninikkalvi.blogspot.com
அதேசமயம் ஆன்லைனில் பாடப்புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பதால், ஓரளவு ஆறுதல் அடைந்து கொள்ளலாம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். சிபிஎஸ்சி 9வது, 10வது படிக்கும் பிள்ளைகளின் தாய் ரத்னா கூறுகையில், பள்ளி மற்றும் கடைகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்காததால், ஆன்லைனில் வாங்கிவிட்டேன். இதற்கு பள்ளித் தரப்பில் இருந்து எந்தவித பிரச்சனையும் இல்லை.
ஆனால் பள்ளிகள் நிர்ணயித்த விலைக்கும், ஆன்லைனில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு பெரிய வேறுபாடு இருக்கிறது. பள்ளிகள் மார்க்கெட் விலையை கூட, புத்தகங்களுக்கு கூடுதலாக வசூலிக்கின்றன என்கிறார். பெரும்பாலான பள்ளிகள் மார்க்கெட் விலையை விட, இருமடங்கு அதிகமாக புத்தகக் கட்டணம் வசூலிக்கின்றன. அதேபோல் வண்ணப் பென்சில்கள், பள்ளிச்சீருடை ஆகியவையும் பள்ளிகள் அதிக விலைக்கு விற்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.