அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், சிறுதானிய உணவுகளுடன் இலவசமாக, 'டியூஷன்' நடத்தப்படுகிறது. திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அதிகளவில், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்களே உள்ளனர்.
இது தவிர, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர் ஏழை குடும்பத்தினர் என்பதால், அவர்களை கல்வியில் ஊக்குவிக்கவும், நன்றாக வாசிக்கும் திறனை வளர்க்கவும், அப்பகுதி இளம்பெண்கள் முயற்சி எடுத்துள்ளனர். இவர்களுடன், தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், இலவச டியூஷனுடன் சிறுதானிய உணவும் வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.