மாவட்டத்திற்கு 5 பள்ளிகளில் கதை சொல்லி கற்பிக்கும் முறையை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகளில் சில மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளது. அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புது, புது கற்பித்தல் வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மனப்பாட பகுதிகள் பாடல் மூலம், அறிவியல் செய்முறைகள் அனிமேஷன் மூலம், ஆங்கில வார்த்தை உச்சரிப்புக்கு சி.டி., மூலம் கற்பிக்கப்படுகின்றன. அதே போல் பாடம் தொடர்பான கதைகளை சொல்லி கற்பிக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக 250 மாணவர்களுக்கு மேல் படிக்கும் 5 பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டன. விரைவில் இந்த பள்ளிகளில் முன்னோடி திட்டமாக கதை சொல்லி கற்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளன
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.