தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுளளன. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாவே செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு புதன்கிழமை (ஜூலை 25), வியாழக்கிழமை (ஜூலை 26) ஆகிய இருநாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் பெற பகுதி- 1 மொழிப் பாடத்துக்கு ரூ.550, பகுதி -2 மொழிப்பாடத்துக்கு (ஆங்கிலம்)- ரூ.550, பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு பகுதி- 1 மொழிப்பாடம், பகுதி- 2 மொழிப்பாடம் (ஆங்கிலம்), உயிரியல் ஆகியவற்றுக்கு தலா ரூ.305; பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் மறுகூட்டல் முடிவுகள் குறித்தும் தெரிந்து கொள்ள இயலும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.