சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்டங்களில் இருந்து , மாநில பாட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் 2024 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டாய தமிழ் கற்கும் சட்டப்படி, 10ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே, சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பிற்கு கட்டாயம் தமிழ் கற்கும் சட்டம் 2015-16 கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. எனவே, படிப்படியாக, 2024 - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழை கற்று தேர்வை எழுத வேண்டும். இந்நிலையில், வேறு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு குடிபெயரும் மாணவர்கள், மாநில பாடதிட்ட பள்ளிகளில் 9,10ம் வகுப்புகளில் சேர, தமிழை தேர்வாக எழுத வேண்டியது இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வரும் 2023-24 ம் கல்வியாண்டு வரை விலக்கு அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனினும், வேறு மாநிலங்களில் இருந்து, தமிழக சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்தால் இந்த விலக்கு பொருந்துமா என அரசாணையில் குறிப்பிடவில்லை.
Search This Blog
Wednesday, July 25, 2018
Comments:0
Home
CBSE
STUDENTS
சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை - 2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு
சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை - 2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.