எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் விரைவில் வழங்க ஏற்பாடு: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியது: மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு தமிழக அரசின் ஒப்புதலுக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதனை உடனடியாகச் சமர்ப்பிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் குறிப்பேடுக்கான ஒப்புதல் பெற்ற பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும். எனவே, இன்னும் சில தினங்களிலேயே விண்ணப்ப விநியோகம் தொடங்கும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.