எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு www.gct.ac.in , www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்ய வேண்டும். ஜூலை 12 கடைசி நாளாகும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர், அதைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து
'செயலர்,
தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்சிஏ சேர்க்கை,
அரசு பொறியியல் கல்லூரி, கோவை - 641 013' என்ற முகவரிக்கு ஜூலை 16-ஆம் தேதி வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை www.gct.ac.in,
www.tn-mbamca.com இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
'செயலர்,
தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்சிஏ சேர்க்கை,
அரசு பொறியியல் கல்லூரி, கோவை - 641 013' என்ற முகவரிக்கு ஜூலை 16-ஆம் தேதி வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை www.gct.ac.in,
www.tn-mbamca.com இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.