'அரசு கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், புதிய பாடப் பிரிவுகளை துவக்கக் கூடாது' என, பல்கலைகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
'மாநிலம் முழுவதும், பல்கலைகளின் கட்டுப்பாட்டில் செயல்படும், 41 உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிக-ளாக மாற்றப்படும்' என, தமிழக அரசு, சமீபத்தில் அறிவித்தது. இதற்கான பணிகள், தற்போது தீவிரப்படுத்தப்-பட்டுள்ளது. முதல் கட்டமாக, புதிய பாடப் பிரிவுகளை துவக்கக் கூடாது என்றும், அரசு கட்டணம் மட்டுமே, நடப்பு கல்வி-யாண்டில் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜூலை, 1 அல்லது ஆக., 1ம் தேதிக்குள் அரசு, உறுப்பு கல்லுாரிகளின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய பாடப் பிரிவுகள் துவக்கக் கூடாது எனவும், பணி நியமனங்களில் மாற்றம் செய்யக் கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், கல்லுாரி கல்வி இயக்குனர் மூலம், உறுப்பு கல்லுாரிகளுக்கு தேவையான ஆசிரியர், அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு கல்லுாரிகளாக மாற்றும் முன், தணிக்கை குறித்த சிக்கல்களை தெளிவுபடுத்தவும் பல்கலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பாரதியார் பல்கலையில், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் உள்ளன. தற்போது, அரசு கல்லுாரிகளாக மாற்றுவதால், ஐந்து கோடி ரூபாய் வரை நிதி சுமை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.