MBBS,B.DS, படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 04, 2018

Comments:0

MBBS,B.DS, படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின், வினியோகிக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 3,050 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 456 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 2,594 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. 

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு முடிவு, நாளை வெளியாக உள்ளது.இதனால், நடப்பாண்டு, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என்ற, எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் குறிப்பேடு, இதுவரை வழங்கப்படவில்லை; உடனே வழங்க, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், தகவல் குறிப்பேடு சமர்ப்பிக்கப்பட்டு, அரசுஒப்புதல் அளித்தபின், ஒரு வாரத்தில், விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews