அரசுப்பள்ளி ஆசிரியருக்கான பணிநிரவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பாசப்போராட்டம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியாக பணியாற்றி வரும் பகவான் என்பவர் பணிநிரவலில் திருத்தணி அருகே அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் ஆசிரியர் பகவானை பணிநிரவல் செய்யக்கூடாது என்று பள்ளி மாணவர்கள் 280 பேர் வகுப்புகளை புறக்கணித்து அவர்களது பெற்றோருடன் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இத்தகைய உணர்ச்சிகரமான பாசப்போராட்டம் காரணமாக ஆசிரியர் பகவானின் பணி நிரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அதே பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை: இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அன்புச்செல்வம் நேற்று பள்ளியில் தலைமை ஆசிரியர் அரவிந்த் மற்றும் 19 ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். ஆசிரியர்களிடம் பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.