விபத்தால் பாதிக்கப்படும் மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு: அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 24, 2018

Comments:0

விபத்தால் பாதிக்கப்படும் மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு: அரசாணை வெளியீடு




விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்வது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் தொடக்கபள்ளி/ நடுநிலைப்பள்ளி/ உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 37,201, அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,402 என மொத்தம் 45,603 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கும் பள்ளியில் இருந்து வீட்டுக்கும் சென்று வரும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அவ்வப்போது சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது.
Kaninikkalvi.blogspot.com 

இடைப்பட்ட பள்ளி நேரத்தில் எதிர்பாராத விபத்தில் சிக்கும் மாணவ, மாணவியர் பலத்த காயம் அல்லது உயிர் சேதம் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளிக்கு வந்து செல்லும்போது ஏற்படும் விபத்து, கல்விச்சுற்றுலா, நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட் கிராஸ், சாரண, சாரணியர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக நடைபெறும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும்போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதே போல், மின்கசிவு, ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து, விடுமுறை நாட்களில் மாணவர்கள் வௌியே செல்லும் போது நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து போன்றவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. விபத்தில் சிக்கி மரணமடைந்த மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசானகாயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews