பள்ளிகூடத்தில் குடிநீர் சட்டம் என்ன சொல்கின்றது!!
பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு குடி நீர் குழாய் வீதத்தில் குடி நீர் குழாய் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்
பாத்திரம் கழுவ, கைகால் கழுவ 20 மாணவர்களுக்கு ஒரு நீர் குழாய் வீதத்தில் நீர் குழாய் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்
பாதுகாப்பான குடி நீர் தரப்படவேண்டும் குடி நீர் உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விநியோகிக்க வேண்டும்
குடி நீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் தூய்மையான முறையில் இருக்க வேண்டும்
எப்பொழுது சுத்தம் செய்யப்பட்டது
யாரால் சுத்தம் செய்யப்பட்டது எப்படி சுத்தம் செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பராமரிக்க வேண்டும்
அரசாணை எண் 270 பள்ளிக்கல்வி (எக்ஸ்-2) துறை நாள் 22.10.2012 படி தனியார் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் அரசு பள்ளிகள் தவறாமல் பின்பற்ற வேண்டிய கடமை ஆகும். நன்றி... நல்வினை வழக்கறிஞர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.