பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர விரும்புபவர்கள் ஜூன் 25-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறையில், முதுநிலை கணினி பயன்பாட்டியல் (எம்.சி.ஏ.) படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர விரும்புபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்டி, டான்செட் தேர்வு எழுதாத, பி.சி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பப் படிப்புகளை முடித்தவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதத் தகுதியானவர்களாவர்.
நுழைவுத் தேர்வு ஜூன் 25-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும், மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு கணினி பயன்பாட்டியல் துறையை 0422 - 2428356, 99441 26231 என்ற எண்களிலோ அல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.