யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு உதவி தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சங்கர் ஐஏஎஸ் அகடாமி வெளியிட்ட அறிக்கை: சங்கர் ஐஏஎஸ் அகடாமி கடந்த 13 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற அதிகாரிகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் சமூக நீதி அமைச்சகம் எஸ்சி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு பணிகளின் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகடாமியை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் 50 எஸ்சி, ஓபிசி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதற்காக 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி முடியும் வரை மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்படும்.
உள்ளூர் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2500, ெவளியூர் மாணவர்களுக்கு ரூ.5000, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவி தொகையாக ரூ.2000 வழங்கப்படும். இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் ஆண்டு வருமானம் 6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
10, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையாக கொண்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும்.
அதன் பிறகு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க ஜூன் 5ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.