முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதிக்கட்ட அகில இந்திய கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் மார்ச் 27 -ஆம் தேதி தொடங்கின.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய இடங்களுக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்து, மீதம் உள்ள இடங்கள் அந்தந்த மாநில அரசுகளின் ஒதுக்கீட்டுக்காக ஏப்ரல் 23-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. கலந்தாய்வு முடிவுகள் மே 18 -ஆம் தேதி வெளியிடப்படும்.
கலந்தாய்வில் இடங்களைப் பெறுவோர் மே 19 முதல் 26 -ஆம் தேதிக்குள் அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும்.
Search This Blog
Wednesday, May 16, 2018
Comments:0
முதுநிலை மருத்துவம்: நாளை இறுதிக் கட்ட கலந்தாய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.