1994ல் பிஇ படிப்பில் சேர்ந்தவர் அரியர்ஸ் எழுத அனுமதி கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 16, 2018

Comments:0

1994ல் பிஇ படிப்பில் சேர்ந்தவர் அரியர்ஸ் எழுத அனுமதி கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி




அண்ணா பல்கலைக்கழகத்தில் 1994ல் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர் தோல்வியடைந்த பாடங்களை (அரியர்ஸ்) எழுத உத்தரவிடக்கோரி  தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 1994ல் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்  மேகநாதன். 1998ல் படிப்பை முடித்தார். ஆனால், கணக்கு உள்ளிட்ட 3 பாடங்களில் அவர் தோல்வியடைந்திருந்தார். தவிர்க்க முடியாத சூழ்நிலையால்  அவரால் அந்த அரியர்ஸ் பாடங்களை எழுத முடியவில்லை. இந்நிலையில், 2000ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்பில் சேர்ந்தவர்கள் அரியர்ஸ் பாடங்களை எழுத வாய்ப்பளித்து அண்ணா பல்கலைக் கழகம் 2017  நவம்பரில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, தனக்கு அரியர்ஸ் பாடங்களை எழுத அனுமதி கோரி மேகநாதன் அண்ணா பல்கலைக்கழகத்தில்  விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.  இதை எதிர்த்து, தனக்கு அரியர்ஸ் பாடங்களை எழுத அனுமதியளிக்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி அவர் உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  மனுதாரர் பொறியியல் படிப்பை முடிக்க தரப்பட்ட காலத்தில் படிப்பை முடிக்கவில்லை. தோல்வியடைந்த பாடங்களை எழுத அவருக்கு பல ஆண்டுகள்  அவகாசம் தரப்பட்டது. ஆனால், அவர் அதை பயன்படுத்தவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews