பள்ளிகளை மூடும் முடிவை அரசு ைகவிடாவிட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மணிமேகலை தலைமையில் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ‘1,350க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடும் முடிவையும், 24 ஆண்டுகளாக தனித்து செயல்பட்டு வந்த தொடக்கக் கல்வித்துறையை மூடும் முடிவையும் தமிழக அரசு கைவிட வேண்டும். Kaninikkalvi
இதை வலியுறுத்தி ஜூன் 6ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பல லட்சம் ஆசிரியர்/அரசு ஊழியர் பணியிடங்கள் இருக்கும் சூழலில், பணியிடங்களை வெட்டி சுருக்கும் ஏற்பாட்டோடு வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை 56ஐ திரும்ப பெறவேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பொதுச்செயலாளர் மயில் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியது என்ற வரலாறை எழுதி வருகிறது. பள்ளிகளை மூடினால் அந்தந்த கிராம மக்களை திரட்டி போராடுவோம்’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.