சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துநர், பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், மின் பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய ஆறு பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஜூன் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். முற்றிலும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ், பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.500 பயிற்சி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது.
விண்ணப்பப் படிவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர ஜூன் 18ம் தேதி கடைசி நாள். விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்த அனைவரும் சேர்க்கைக்காக ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம் வர வேண்டும்.
விண்ணப்பதாரரின் மதிப்பெண் தகுதி தரவரிசையின்படி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து கலந்தாய்வு அன்று பயிற்சியில் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும். பயிற்சியில் சேர வயது வரம்பு 15 முதல் 40 வயது ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.