இந்தியாவிலேயே முதன்முறையாக கண்பார்வை இழந்த பெண் கேரளாவில் கலெக்டராக பொறுப்பேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 30, 2018

Comments:0

இந்தியாவிலேயே முதன்முறையாக கண்பார்வை இழந்த பெண் கேரளாவில் கலெக்டராக பொறுப்பேற்பு



கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பட்டில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் பிரஞ்ஜாலின் பட்டில். இவர் 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் 2 கண்களின் பார்வை பறிபோனது.

இருந்தாலும் பெற்றோர் மகளுக்கு தைரியமும், ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர். பிரஞ்ஜாலின் பட்டில் வளர வளர சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. படிப்பிலும் தீராத தாகம் இருந்த அவர் தொடுதிரை உதவியுடன் நன்கு படித்து வந்தார். மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடிதார். பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டம் முடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதினார். 773-வது இடமே கிடைத்ததால் அவரால் கலெக்டர் ஆக முடியவில்லை. அதே நேரத்தில் ரெயில்வே துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது லட்சியமான கலெக்டர் கனவு அவரை வாட்டியது.

இதனையடுத்து அவர் 2017-ம் ஆண்டு மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். இந்த முறை 124-வது இடத்தை பிடித்தார். இந்த இடம் கலெக்டர் தேர்வுக்கு போதுமானதாக இருந்தது. தேர்வில் வெற்றி பெற்ற அவர் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றார். தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். 

நெகிழ்ச்சியடைந்த அதிகாரிகள் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி மகளை கலெக்டர் இருக்கையில் அமர வைத்தார். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews