சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?- உங்களுக்கான படிப்பு இதுதான்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 27, 2018

1 Comments

சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?- உங்களுக்கான படிப்பு இதுதான்!


உங்களைச் சுற்றியிருக்கும் முடியாதவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா? நம் அன்றாட வேலைகளுக்கு இடையே சமுதாயத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறீர்களா?
மேலே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் சமூக சேவை குறித்த படிப்பை தாரளமாக படிக்கலாம். மனிதனை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை தேர்ந்தேடுக்கலாம்.Kaninikkalivi.blogspot.in 
இந்தப்படிப்பானது பல்வேறு நிலைகளில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் நபர்களுக்கு தக்க சூழ்நிலையில் ஆலோசனை, ஆதரவு மற்றும் உதவி செய்வது, பல்வேறுவிதமான சமூக சிக்கல்களைப் பற்றிய புரிதலையும், அவற்றை தீர்ப்பதற்கான நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
மேலும் எவ்வாறு தொழில்முறையாக சமூக சேவையை வழங்க முடியும் என்பதை இந்தப் படிப்பை முடிப்பதின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

படிப்பு:

பொதுவாக 2வில் எந்த குரூப் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், (BSW) 3 ஆண்டு சமூக சேவை குறித்த இளநிலைப் படிப்பை படிக்கலாம்.
இளநிலைப் பட்டப் படிப்பில் 40 சதவீதம் முதல் 55 சதவீதம் வரையிலான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். (கல்வி நிறுவனங்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வேறுபடும்)
டிகிரி முடித்த பின் இந்தப்படிப்பை படிக்க விரும்பினால் (MSW) என்று அறியப்படும் முதுநிலை படிப்பை படிக்கலாம்.
பல கல்வி நிறுவனங்கள் எம்ஏ (சோஷியல் வெர்க்) போன்ற வேறு சில பெயர்களிலும் இப்படிப்பை வழங்குகின்றன.
Kaninikkalivi.blogspot.in 
கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகள்:

தில்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் வெர்க், தில்லி பல்கலைக்கழகம், தில்லி.

டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ், மும்பை / குவாஹாட்டி.

பஞ்சாப் பல்கலைக்கழகம், பஞ்சாப்.

கிறிஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூரூ.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வெர்க், சென்னை

ஜமியா மில்லியா பல்கலைக்கழகம், தில்லி.

காலேஜ் ஆஃப் சோஷியல் வெர்க் நிர்மலா நிகேதன், மும்பை

புணே பல்கலைக்கழகம், புணே

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

கல்விக் கட்டணம்:

கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, ஒரு வருடத்திற்கு ரூ.1000 முதல் ரூ.50,000 வரை வேறுபடுகிறது. மேலும், சில தனியார் கல்வி நிறுவனங்களில் தனிப்பட்ட கட்டணங்களும் உண்டு.

வேலை வாய்ப்பு: 

நிறைய சம்பாதிக்க வேண்டும். பணம் மட்டுமே குறிக்கோள் என்பவர்களுக்கு இது ஏற்ற துறை அல்ல. இத்துறையை விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாணவர்களும், இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகள் பல நிலைகளில் உள்ளன.

சம்பளம்:

ஆரம்பகட்டத்தில் 10,000 முதல் பெறலாம். சம்பளம் குறைவாக இருந்தாலும், போக, போக சம்பளம் அதிகமாக பெற வாய்ப்புள்ளது.

படித்து சம்பாதிக்க மட்டுமே நினைக்கும் மாணவர்கள் மத்தியில், சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கான படிப்பு இது. கற்ற கல்வியின் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்தப் படிப்பு மிகவும் ஏற்றது.

1 comment:

  1. இந்த படிப்பிற்கு வேலை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது.. இப்போதைய மத்திய அரசின் உத்தரவின் படி corporate கம்பெனிகளில் CSR ( Corporate Social Response) துறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.. எனவே எல்லா corporate கம்பனிகளிலும் இந்த துறைக்கு ஆள் எடுக்கப் படகிறது. இது வரிப் பணத்தை அரசுக்கு கட்டாமல் நேரடியாக மக்களுக்கே social service முறையில் செலவு செய்யும் திட்டமென்பதால் சமூக சேவை சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.. ஆர்வமுள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.. Best of luck..

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews