தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் பட்டய பயிற்சி வகுப்புகளை மூடுவதற்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பிரகாஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு உத்தரவின்படி, 1990ல் மாவட்ட அளவில் கல்வி பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இந்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சி பட்டய வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன.Kaninikkalivi.blogspot.in
இந்நிலையில், மாவட்ட அளவிலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மறுகட்டமைப்பு செய்வது தெடர்பாக தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில், மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வந்த ஆசிரியர் பட்டய பயிற்சி வகுப்புகளை மூடுவதற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த 9ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு பயிற்சி நிறுவனத்திலும் பள்ளி முதல்வர், துணை முதல்வர், பயிற்றுனர்கள் என 25 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த உத்தரவால் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு விடும். எனவே, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது. பட்டய வகுப்புகள் மூடப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளருக்கும், தமிழக பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.