சைனிக் பள்ளிகள் என்பவை இந்தியா முழுவதும் செயல்படும் பள்ளிகள் இணைந்த ஒருங்கிணைப்பு குழு மற்றும் இந்த பள்ளிகளை சைனிக் பள்ளிகள் சமுதாய சங்கம் நிர்வகிக்கிறது.
1961ல் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் அவர்களால் தொடங்கப்பட்டது.படைகளில் அதிகாரிகள் தேவையை சமநிலையில் வைக்க , அதற்காக குழந்தைகள் என்டிஏவில் இணையத் தேவையான தகுதிகளை வளர்க்கவே இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 26 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இவைகள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது.இந்த பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேற்பார்வையில் அந்தந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வரும்.
எப்படி குழந்தைகளை சேர்ப்பது?
குழந்தைகளை ஆறாவது மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் நேரடியாக சேர்க்க முடியும்.எழுத்து தேர்வு,நேர்முக தேர்வு,மருத்துவ சோதனை என அனைத்தும் முடிந்து தேர்ச்சி பெற்ற மாணவமணிகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர்.இதற்கென
அனைத்திந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு ( All India Sainik School Entrance Exam )நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெறும் மாணவர்களே பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.வருடத்திற்கு ஒரு முறை ஜனவரியின் முதல் ஞாயிற்றுகிழமை இந்த தேர்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வு எப்படி இருக்கும்?
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.தமிழகத்தின் அமராவதிநகர் சைனிக் பள்ளியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
Subjects:
Mathematics and Science (200+75 marks)English and Social Studies (100+75marks)
ஆறாம் வகுப்பு மாணவர்கள்
ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வை ஆங்கிலம்,ஹிந்தி,தமிழ் அல்லது ஏதேனும் பிராந்திய மொழியில் எழுதிக்கொள்ளலாம்.
Subjects:
Mathematics and Language Ability Test (200 marks)Intelligence Test (100 marks)
OMR சீட் முறை அடிப்படையில் தேர்வு இருக்கும்.
வினாத்தாள் வகை வருடாவருடம் மாற்றத்தக்கது.மேலும் நுழைவுத் தேர்வுக்கான வினாக்கள் ஐந்து முதல் எட்டு வகுப்புகள் NCERT புத்தகங்களில் இருந்து எடுக்கப்படும்.NCERT என்பது NCERT – National Council Of Educational Research And Training
ஆகும்.
வயது வரம்பு மற்றும் தகுதி
ஆறாம் வகுப்பில் இணைய விரும்பும் மாணவர் இணைய விரும்பும் வருடத்தின் ஜீலை 1 கணக்குப்படி, 10 வயதிற்கு மேல் 11 வயதிற்குள் இருக்க வேண்டும்.அதே போல ஒன்பதாம் வகுப்பு இணைய விரும்பும் மாணவர் 13-14 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேலும் இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.SC( 15%), எஸ்டி ( 7.5% ) மற்றும் 25% இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நேரடியாக பள்ளிக்கு சென்று அமைப்பு,கட்டணம் போன்ற தகவல்களை நேரடியாக கேட்டறிய முடியும்.இணைய விரும்புபவர் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று விண்ணப்ப படிவம் தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கட்டணத்துடன் டெல்லிக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதற்கான விலாசம்:
Address: CBSE – Regional Office, PS 1-2, Institutional Area,
I.P. EXTN., Patparganj, New Delhi – 110 090
Ph No: 91-11-22509252 – 59
இந்தியாவில் உள்ள சைனிக் பள்ளிகள்
1.Sainik School, Kazhakootam, Thiruvananthapuram (Trivandrum), Kerala
2.Sainik School Amaravathinagar, Tamil Nadu Established: 16-Jul-1962
3.Sainik School, Ambikapur, Chhattisgarh Established: 01-Sep-2008
4 Sainik School, Balachadi, Gujarat Established: 08-Jul-1961
5.Sainik School Bhubaneswar, Odisha Established: 01-Feb-1962
6.Sainik School Bijapur, Karnataka Established: 16-Sep-1963
7.Sainik School Chittorgarh, Rajasthan Established: 07-Aug-1961
8.Sainik School Ghorakhal, Nainital Uttarakhand Established: 21-Mar-1966
9.Sainik School Goalpara, Assam Established: 12-Nov-1964
10.Sainik School Gopalganj, Bihar Established: 12-Oct-2003
11 Sainik School Imphal, Manipur Established: 07-Oct-1971
12.Sainik School Kapurthala Punjab Established: 08-Jul-1961
13.Sainik School Bijapur, Karnataka Established: 08-Jul-1961
14.Sainik School Korukonda, Andhra Pradesh Established: 18-Jan-1962
15.Sainik School, Kunjpura, Haryana Established: 03-Jul-1961
16.Sainik School Lucknow, Uttar Pradesh Established: Jul-1960
17.Sainik School Nagrota, Jammu & Kashmir Established: 22-Aug-1970
18.Sainik School Nalanda, Bihar Established: 12-Oct-2003
19.Sainik School Pungalwa, Nagaland Established: 02-Apr-2007
20.Sainik School Purulia, West Bengal Established: 29-Jan-1962
21.Sainik School Rewa, Madhya Pradesh. Established: 20-Jul-1962
22.Sainik School, Rewari, Haryana Established: 29-Aug-2009
23.Sainik School Sujanpur Tira, Himachal Pradesh Established: 02-Nov-1978
24.Sainik School Tilaiya, Tilaiya, Jharkhand Established: 16-Sep-1963
25.Sainik School Satara, Maharashtra Established: 23-Jun-1961
26.Sainik School, Sambalpur, Odisha (proposed)
பெண்களுக்கான ஒரே சைனிக் பள்ளி கிட்டூர் இராணி சன்னம்மா பள்ளி மட்டுமே.அது பெல்கமில் அமைந்துள்ளது.மற்றபடி அனைத்தும் ஒரே மாதியானது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.