ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு இன்று: ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத்தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 20, 2018

Comments:0

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு இன்று: ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத்தேர்வு



நாடு முழுவதும் ஐஐடி, ஐஐஎஸ்சி மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத்தேர்வு இன்று நடக்க உள்ளது.  நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்கள், பெங்களுரூ ஐஐஎஸ்சியில் உள்ள இளநிலை இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். 

ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வுக்கான அறிவிக்கை  கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டது.

 டிசம்பர் 1ம் தேதி முதல்  2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு  விண்ணப்பித்தனர்.

ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 8ம் தேதியும், கணினிவழி எழுத்து தேர்வு ஏப்ரல் 15,16ம் தேதிகளில் நடந்தது.

 இந்த தேர்வு எழுத நாடு முழுவதும் இருந்து 9.25 லட்சம் பேர் எழுதினர். ேஜஇஇ மெயின் முதல்தாள் தேர்வு முடிவு மே 30ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் மே 31ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவு அடிப்படையில் 2,31,024 மாணவர் தேர்ச்சி பெற்றனர். 

அந்த மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுதேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 2ம் தேதி தொடங்கி, மே 8ம் தேதி வரை விண்ணப்பித்தனர். 

தமிழகம், புதுச்சேரியில் இன்று சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரியில் இந்த கணினிவழி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

 காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. 

இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் ஐஐடி, ஐஐஎஸ்சி மாணவர் சேர்க்கைக்கான இணையதளவழி கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews