தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் முடிவுகள் சனிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
ஆன்லைனில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கைக் கடிதத்தை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இடங்களைப் பெற்ற மாணவர்கள் சேர்க்கைக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து மே 26-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் சென்று சேர வேண்டும். இறுதிக்கட்டக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மே 26-ஆம் தேதி மாலையில் அந்தந்தக் கல்லூரிகளிடமே சமர்ப்பிக்கப்படும்.
அந்த இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம்.
தனியார் கல்லூரிகள் மூலம் இடங்களைப் பெறும் மாணவர்கள் மே 31-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.