கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூலை, 3வது வாரம் கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 22, 2018

Comments:0

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூலை, 3வது வாரம் கவுன்சிலிங்


'கால்நடை மருத்துவ படிப்புக்கு, ஜூன், 11க்குள், 'ஆன்லைனில்' விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்; ஜூலை, மூன்றாவது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. 


இந்தக் கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., எனப்படும், கால்நடை மருத்துவம், ஏ.ஹெச்., எனப்படும், கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு, 360 இடங்கள் உள்ளன. மேலும், பி.டெக்., உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., கோழியின தொழில்நுட்பட பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 20 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 460 இடங்களுக்கு, 2018 - 19ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை, www.tanuvas.ac.in என்ற, இணையதளத்தில் இருந்து, அடுத்த மாதம், 6க்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அதே மாதம், 11க்குள், 'தலைவர், சேர்க்கை குழு, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51' என்ற, முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்து, கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் கூறியதாவது:

விண்ணப்பங்களை எளிதாக நிரப்பும் வகையில், மாதிரி விண்ணப்பமும் இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்ததை விட, நடப்பாண்டில், அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கால்நடை மருத்துவ படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், பி.டெக்., உணவு தொழில்நுட்ப படிப்பில், 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஒதுக்கீட்டிற்கும் அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்றாவது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

 கால்நடை மருத்துவ படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, ஒன்பது இடங்களும், வெளிநாட்டினருக்கு, ஐந்து இடங்களும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோருக்கு, இரண்டு இடங்களும் ஒதுக்கப்படும். பி.டெக்., உணவு தொழில்நுட்ப பாடப்பிரிவில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு, தலா, இரண்டு இடங்கள் உள்ளன. வெளிநாட்டினர், வரும், 28ல் இருந்து, ஜூன், 30 வரை விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 11க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews