40 கோடிப் பேருக்குத் திறன் பயிற்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 22, 2018

Comments:0

40 கோடிப் பேருக்குத் திறன் பயிற்சி!


தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 40 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புவனேஷ்வரில் மே 21ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியால் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் நாட்டு மக்களுக்கு பல்வேறு தொழில் பிரிவுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

வெல்டிங் முதல் கணினி தகவல் வரையில் பல்வேறு வகையான வேலைகளுக்கான திறன் பயிற்சி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. புவனேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு நிறுவனம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற திறன் மேம்பாட்டு நிறுவனங்களை விசாகப்பட்டினம், கொச்சி, அகமதாபாத், கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 ஏக்கர் நிலத்தில் 46.17 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மிகப்பெரிய மாதிரி திறன் மேம்பாட்டு அகாடமியை சர்வதேசத் தரத்துக்கு அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க இயலும்” என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews