பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 31, 2018

Comments:0

பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்


பிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வழக்கம் போல், ஆதிக்கம் செலுத்தின. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும், தனியார் பள்ளிகள், மூன்றாம் இடமும் பெற்றன.

பிளஸ் 2வில் முன்னிலைக்கு வரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1 பொது தேர்வின் கடின வினாத்தாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. 

ரயில்வே பள்ளிகளும், ஓரியண்டல் என்ற பிறமொழி பள்ளிகளும், தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. அரசு பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல், தேர்ச்சியில், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆண்கள் தேர்ச்சி மோசம்பிளஸ் 1 பொது தேர்வு முடிவில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளன. பல்வேறு வகை பள்ளிகளில், பெண்கள் பள்ளிகள், 94.9 சதவீத தேர்ச்சியுடன், முதலிடம் பெற்றுள்ளன. ஆனால், ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், பெண்கள் பள்ளிகளை விட, 14 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.அதேநேரம், மாணவர் மற்றும் மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில், 91.6 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. 

பாடப்பிரிவு வாரியான தேர்ச்சியிலும், அனைத்து பாடங்களிலும், 90 சதவீதத்துக்கு மேல் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப பாடத்தில், 99.80 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தாவரவியலில் சரிவுபிளஸ் 1 தேர்வில், மொழி பாடங்களை, 8.47 லட்சம் பேர் எழுதி, அதில், 95.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இயற்பியலில், 5.22 லட்சம் பேர் தேர்வெழுதி, 93 சதவீதம் பேரும், வேதியியலில், 5.22 லட்சம் பேர் பங்கேற்று, 92.74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவில், உயிரியல் தேர்வெழுதிய, மூன்று லட்சம் பேரில், அதிகபட்சமாக, 96.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அறிவியல் பிரிவில், தாவரவியல் தேர்வெழுதிய, 76 ஆயிரம் பேரில், 89 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 தேர்வின்போது, தாவரவியல் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவும் குறைந்துள்ளது.

கணித வினாத்தாளும் கடினமாக இருந்த நிலையில், அதில், 4.25 லட்சம் பேர் தேர்வு எழுதி, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்தில், 94 சதவீதமும், வரலாறில் மிக குறைவாக, 87 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. 

மனை அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய, 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

நிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சிநிர்வாகம் சதவீதம்1. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.672. 

ஆங்கிலோ இந்தியன் பள்ளி 98.573. சுயநிதி பள்ளிகள் 98.054. 

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளி 97.975. ஓரியண்டல் பள்ளிகள் 97.656. ரயில்வே பள்ளிகள் 96.307. 

பகுதி அரசு உதவி பள்ளிகள் 96.238. அரசு உதவி பள்ளிகள் 94.409. இந்து அறநிலையத்துறை 94.0610. சமூக நலத்துறை 93.8811. 

வனத்துறை பள்ளிகள் 90.5812. மாநகராட்சி 88.6413. கள்ளர் சீர்திருத்த துறை 88.0514. நகராட்சி பள்ளிகள் 85.7215. 

பழங்குடியினர் நலத்துறை 84.9316. அரசு பள்ளிகள் 83.9117. ஆதி திராவிடர் துறை 77.74

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews