அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது: தொடக்கக்கல்வி இயக்குநர் புதிய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 16, 2018

Comments:0

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது: தொடக்கக்கல்வி இயக்குநர் புதிய உத்தரவு


கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகளில் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் வழங்கியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்ட ெதாடக்கக் கல்வி அலுவலர்களும் அரசுப்பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக 18ம் தேதி அனைத்து உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையை கோடை விடுமுறையிலேயே நடத்த தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுமக்கள் அறியும் வகையில் பேனர், துண்டு பிரசுரம், பதாதைகள், விளம்பர பலகைகள் மற்றும் பிரசார வாகனங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். காற்றோட்ட சூழலில் உள்ள வகுப்பறைகள், மதிய உணவு திட்டம், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை வசதி, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டவை குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்தும் போது பள்ளி மாணவர்களை ஊர்வலத்தில் பங்குபெறச் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாணவர்களுக்கு பரிசு அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த ஆசிரியர்கள் பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பாளை மனகாவலம் பிள்ளை நகர் தொடக்கப்பள்ளி சார்பில் சிலேட், நோட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நெல்லை மாவட்டம் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கல்வியாண்டில் சேர உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளி பெயர் பொறித்த குடைகளை பரிசளிக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews