நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியான 10ஆம் வகுப்பு மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 22, 2018

Comments:0

நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியான 10ஆம் வகுப்பு மாணவி


ஸ்டெர்லைட்ஆலையை நிராந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போரட்டத்தில், 10 வகுப்பு மாணவி உட்பட 11 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டிய நிலையில், போராட்டம் இன்று மேலும் தீவிரமடைந்தது.

144 தடை உத்தரவை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் போரட்டக்காரர்கள் இன்று நுழைய முயன்றதால் ,காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அறவழியில் போரடிய மக்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். காவல்துறையினரின் தக்குதலுக்கு மக்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் கண்ணீர் புகை குண்டி வீசப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை நோக்கி அறவழியில் முன்னேறிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், தாமோதர் நகர் பகுதியில் வசிக்கும் மணிராஜ், குறுக்குசாலையை சேர்ந்த தமிழரசன் , ஆசிரியர் காலணியை சேர்ந்த சண்முகம் , மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன் , தூத்துக்குடியை சேர்ந்த கந்தையா உள்பட 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். அவரும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இன்று அவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews