கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்தா? :'யு.ஜி.சி., விதிப்படி, நெட், செட் தேர்ச்சி மற்றும், பி.எட்., தேர்ச்சி பெற்றவர்களை, கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும் தெளிவுபடுத்த சங்கம் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 17, 2017

Comments:0

கவுரவ விரிவுரையாளர்களுக்கு கல்தா? :'யு.ஜி.சி., விதிப்படி, நெட், செட் தேர்ச்சி மற்றும், பி.எட்., தேர்ச்சி பெற்றவர்களை, கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும் தெளிவுபடுத்த சங்கம் வலியுறுத்தல்

தகுதி இல்லாத, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 'கல்தா' கொடுக்கும், உயர் கல்வித் துறையின் திட்டம் குறித்த, உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்' என, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, 83 அரசு கல்லுாரிகளில், 1,650 பேர், மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகின்றனர். 10 ஆயிரம் ரூபாயாக இருந்த ஊதியம், 2016 சட்டசபை தேர்தலுக்கு முன், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில், 'யு.ஜி.சி., விதிப்படி, நெட், செட் தேர்ச்சி மற்றும், பி.எட்., தேர்ச்சி பெற்றவர்களை, கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும்' என, அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், உயர் கல்வித் துறைக்கு மனு அளித்துஉள்ளனர்.இதையடுத்து, யு.ஜி.சி., விதிப்படி, தகுதி பெறாத விரிவுரையாளர்களின் பட்டியலை, உயர் கல்வித் துறை சேகரிக்கிறது. இந்த நடவடிக்கையால், கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர், அருணகிரி வெளியிட்டு உள்ள அறிக்கை:கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் சேரும் போது, அந்த கால கட்டத்தில் இருந்த கல்வித் தகுதிக்கு ஏற்ப, தேர்வு செய்யப்பட்டனர். முறைப்படி விண்ணப்பம் பெற்று, துறை தலைவர் அடங்கிய, தேர்வு குழு வழியாக, கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கே, ஆண்டுதோறும், மீண்டும் பணி வழங்கப்படுகிறது. எனவே, இது குறித்து, உயர் கல்வித் துறை உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews