தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..! யார் இந்த புரோஹித்? இவரின் பின்னணி என்ன தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 30, 2017

Comments:0

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..! யார் இந்த புரோஹித்? இவரின் பின்னணி என்ன தெரியுமா?



தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..! யார் இந்த புரோஹித்? இவரின் பின்னணி என்ன தெரியுமா?


தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்த பன்வாரிலால் புரோஹித், மூன்று முறை நாக்பூர் தொகுதி எம்.பியாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் 2 முறையும் பாஜக சார்பில் ஒரு முறையும் என மூன்று முறை எம்.பியாக இருந்துள்ளார். அசாம் மாநில ஆளுநராக சிறிது காலமும் மேகாலயா ஆளுநராகவும் பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார்.
தொடக்கத்தில் காங்கிரசில் இருந்த பன்வாரிலால் புரோஹித், பிறகு பாஜகவிற்கு சென்று 1996-ம் ஆண்டு பாஜக சார்பில் எம்.பி ஆனார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் காங்கிரசிற்கு சென்ற பன்வாரிலால், மறுபடியும் பாஜகவில் சேர்ந்தார். இவ்வாறு காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இரண்டு முறை புரோஹித் மாறி மாறி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 2003-ம் ஆண்டு விதர்பா ராஜ்ய கட்சி என்ற கட்சியை புரோஹித் தொடங்கினார்.
இவ்வாறு அரசியலில் எம்.எல்.ஏ, எம்.பியாக மட்டுமல்லாமல் தனிக்கட்சி நடத்திய அனுபவமும் புரோஹித்துக்கு உண்டு. 
தமிழகத்தில் அரசியல் நெருக்கடி மிகுந்த இந்த நிலையில், புரோஹித் எப்படி செயல்படப் போகிறார்? பிரச்னைகளை திறம்படக் கையாள்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..





தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவிற்கு பதிலாக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940 ம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி பிறந்தவர். இவர் அசாம் கவர்னராக பணியாற்றி உள்ளார். நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். துவக்கத்தில் இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர் 1991 ல் பா.ஜ.,வில் இணைந்தார்.
இதே போன்று, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேகாலயா கவர்னராக கங்கா பிரசாத், அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி.மிஸ்ரா, பீஹார் கவர்னராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews