தமிழகத்தில் மேலும் 2 மருத்துவ கல்லுாரிகள்... -
2 more medical colleges in Tamil Nadu...
தமிழகத்தில் 300 இடங்களுடன், இரு தனியார் மருத்துவ கல்லுாரிகள் துவக்க, தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மேலும், சென்னை இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில், 50 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டம், நந்தா மருத்துவ கல்லுாரியில், முதல் ஆண்டு சேர்க்கை துவக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
நந்தா மருத்துவ கல்லுாரி, ஈரோடில் இருந்து 6 கி.மீ., துாரம் உள்ள பிச்சாண்டம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கல்லுாரியில், 150 இடங்களுக்கு சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இணைப்பில் உள்ள இக்கல்லுாரியின் மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு தகுதி மற்றும் இடஒதுக்கீடு விதிகளின்படி நடத்தப்படும். தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சார்பில், பெரம்பூரில் உள்ள சீனிவாசன் மருத்துவ கல்லுாரியில், 2021ல் மாணவர் சேர்க்கை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, 150 இடங்களுடன், புதிதாக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் மருத்துவமனை துவக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி மற்றும் முதுகலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.