Breaking

Sunday, September 20, 2026

அக்டோபர் 1 முதல் இவர்களுக்கு மானிய விலை கேஸ் சிலிண்டர் கிடையாது! மத்திய அரசு அதிரடி!



அக்டோபர் 1 முதல் இவர்களுக்கு மானிய விலை கேஸ் சிலிண்டர் கிடையாது! மத்திய அரசு அதிரடி!

புதுடெல்லி, செப்.20: இந்திய நுகர்வோருக்கு ஒரு மிக முக்கியமான அதிர்ச்சி மற்றும் எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. தகுதியான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மட்டுமே சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு தற்போது மிகக் கடுமையான நடவடிகையை எடுத்துள்ளது.



கட்டாயமாக்கப்படும் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம்!

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் நுகர்வோர் அனைவரும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (Aadhaar Biometric Verification) முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி இணைப்புகளைத் தடுத்து, உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே மானியம் வழங்குவதற்காக இந்த பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 1 முதல் மானியம் கிடையாது: மத்திய அரசு கெடு!

இதற்காகப் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பலமுறை காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது. இந்த காலநீட்டிப்பின் பயனாக கடந்த 19-ந்தேதி நிலவரப்படி, 27.43 கோடி வீட்டு உபயோக நுகர்வோர், அதாவது மொத்தத்தில் 89.9 சதவீதம் பேர் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டனர்.



இன்னும் 10 சதவீதம் பேருக்கு இறுதி எச்சரிக்கை!

இருப்பினும், இன்னும் 10 சதவீதம் நுகர்வோர் இந்த பயோமெட்ரிக் பதிவை முடிக்காமல் பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்காகவே தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி வரை மட்டுமே கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

உடனே செய்ய வேண்டியது என்ன?

வருகிற அக்டோபர் 1-ந் தேதிக்குள் தங்களது பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காதவர்களுக்கு, அதற்குப் பிறகு மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. எனவே, கேஸ் சிலிண்டர் மானியத்தைத் தொடர்ந்து பெற நுகர்வோர் உடனடியாக தங்களது கேஸ் ஏஜென்சியை அணுகி இந்த ஆதார் பதிவை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு, இதுவரை ஆதார் இணைப்பு செய்யாத நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog