Breaking

Monday, July 20, 2026

பள்ளிகளில் மகிழ் முற்றம் துவக்கம் - தலைமைப்பண்பு வளர்க்க முயற்சி

பள்ளிகளில் மகிழ் முற்றம் துவக்கம் - தலைமைப்பண்பு வளர்க்க முயற்சி

This image shows a newspaper article in Tamil reporting on the inauguration of a "Magi Mutram" (joy corner) student group initiative at a middle school near Pollachi, intended to foster leadership skills.



படக்குறிப்புகள்:

புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் மாணவர் குழு அமைக்கப்பட்டது.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் மாணவர் குழுவினர்.

The initiative includes forming five different groups for students from 1st to 8th grade, named Kurinji, Mullai, Marutam, Neithal, and Palai.

Student group leaders were selected for each of these five groups.

The article mentions the involvement of a headmaster named Ganesan and a teacher named Chitra.

பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் மாணவர் குழு அமைக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்பாட்டுக்காக, மகிழ் முற்றம் – மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். மாணவர்களிடையே தலைமைப்பண்பு, ஆளுமைத்திறன் வளர்க்கும் விதத்தில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து மாணவர் குழுக்கள் அமைத்து, மாணவர் குழு தலைவர், மாணவர் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குறிஞ்சிக் குழுவின் மாணவர் தலைவர் சாதனாஸ்ரீ, முல்லை குழு தலைவர் தர்ஷன், மருதம் குழு தலைவர் கபிக் ஷாஸ்ரீ, நெய்தல் குழு தலைவர் சுமந்த், பாலை குழு தலைவராக வீராலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு குழுவுக்கான மாணவர் தலைவர்கள், அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்து பதவியேற்றனர்.

மாதத்தின் இறுதியில் குழுவில் உள்ள பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பண்புகளில் சிறந்து விளங்கும் குழு வெற்றி பெற்றதாக அறிவித்து, கேடயம் வழங்கி பாராட்டு செய்யப்படும். வெற்றி பெற்ற குழுவின் கொடி பள்ளியில் பறக்கவிடப்படும், என, தலைமையாசிரியர் தெரிவித்தார்.

★ புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், மகிழ் முற்றம் மாணவர் குழு துவக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, மாணவர் குழு தலைவர், மாணவர் அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்குழுவுக்கான ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog