புதிய வசதி: Gmail மின்னஞ்சல் ஐடியை மாற்றிக் கொள்ளலாம் – எப்படி, எப்போது, என்ன கட்டுப்பாடுகள்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 03, 2026

Comments:0

புதிய வசதி: Gmail மின்னஞ்சல் ஐடியை மாற்றிக் கொள்ளலாம் – எப்படி, எப்போது, என்ன கட்டுப்பாடுகள்?

புதிய வசதி: Gmail மின்னஞ்சல் ஐடியை மாற்றிக் கொள்ளலாம் – எப்படி, எப்போது, என்ன கட்டுப்பாடுகள்? New feature: You can change your Gmail email ID – how, when, and what are the restrictions?

புதிய வசதி: Gmail மின்னஞ்சல் ஐடியை மாற்றிக் கொள்ளலாம் – எப்படி, எப்போது, என்ன கட்டுப்பாடுகள்?

இது விரைவில் பலருக்கு பயனளிக்கும் ஒரு புதிய Gmail வசதி.

நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் Gmail மின்னஞ்சல் முகவரியை (Email ID) மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை Google வழங்கத் தொடங்கியுள்ளது.

மின்னஞ்சல் முகவரியை மாற்றிய பிறகு,

புதிய ஐடி உங்கள் முதன்மை (Main) Gmail ஐடி ஆக செயல்படும்.

பழைய ஐடி ஒரு Alias (துணை) ஐடி ஆக இருக்கும்.

இந்த இரண்டு ஐடிகளிலும் எதைக் கொண்டு வேண்டுமானாலும் Login செய்யலாம்.

முக்கியமான விஷயம்

உங்கள் Google Drive, Google Photos, மற்ற Google சேவைகளில் உள்ள தரவுகள் எதுவும் மாற்றப்படாது.

எந்த Gmail ஐடி மூலம் நுழைந்தாலும், உங்கள் அனைத்து தகவல்களையும் முழுமையாக அணுக முடியும். உதாரணம்

tsk@gmail.com என்ற ஐடியை

tsk1@gmail.com என மாற்றிக்கொள்ளலாம்.

நீங்கள் கவனிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்

¶ 12 மாதக் கட்டுப்பாடு

ஒருமுறை Gmail ஐடி மாற்றினால்,

அடுத்த 1 வருடத்திற்கு மீண்டும் மாற்ற முடியாது.

¶ எண்ணிக்கை வரம்பு

உங்கள் வாழ்நாளில் 3 முறை மட்டுமே இவ்வாறு Gmail ஐடியை மாற்ற அனுமதி.

இந்த வசதி தற்போது எங்கு?

இந்த வசதி தற்போது சோதனை (Testing) முறையில்

இந்தியா உட்பட சில நாடுகளில் அறிமுகமாகத் தொடங்கியுள்ளது.

உங்கள் கணக்கில் வந்துள்ளதா என்பதை எப்படி பார்க்கலாம்?

1. Google Account Settings

2. Personal Info

3. Email

இந்த பகுதியிலே சென்று சரிபார்க்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews