அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? கூடுதல் தலைமைச் செயலாளர் ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 13, 2025

Comments:0

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? கூடுதல் தலைமைச் செயலாளர் ஆலோசனை



அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? கூடுதல் தலைமைச் செயலாளர் ஆலோசனை

165 அமைப்பின் பிரதிநிதிகளுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஐஏஎஸ், ஆலோசனை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்களை விரிவாக ஆராய்ந்து, ஊழியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், மாநிலத்தின் நிதி நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருத்தமான மற்றும் சாத்தியமான ஓய்வூதிய அமைப்பு குறித்து மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பல்வேறு அரசு ஊழியர்கள் அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டத்தை நான்கு சுற்றுகளாக, நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சு நடத்த உள்ளார். இதில் பங்கேற்க 164 அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் தினமும் தலா 40 அமைப்புகள் ( நான்காவது நாள் 44 அமைப்புகள்) என்ற அடிப்படையில் ஒரு அமைப்பிற்கு இரண்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று வரும் ஆகஸ்ட் 18ல் இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 25 அன்றும், 3 அது சுற்று செப்டம்பர் 1ஆம் தேதி அன்று ம் நான்காம் சுற்று செப்டம்பர் எட்டாம் தேதி அன்று நடக்க உள்ளது. நான்கு நாட்களும் காலை 11 மணிக்கு சந்திப்பு துவங்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews