அண்ணா பல்கலை.யில் எம்இ தெர்மல் இன்ஜீனியரிங் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 11, 2025

Comments:0

அண்ணா பல்கலை.யில் எம்இ தெர்மல் இன்ஜீனியரிங் அறிமுகம்

அண்ணா பல்கலை.யில் எம்இ தெர்மல் இன்ஜீனியரிங் அறிமுகம்

அண்ணா பல்கலைக் கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையில், நடப்பு கல்வி ஆண்டில், எம்இ தெர்மல் இன்ஜினீயரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இன்ஜின் மற்றும் ஹைப்ரிட் டெக்னாலஜீஸ் பிரிவில் சிறப்பு பாடமாக உள்ளடக்கிய இந்த படிப்பில் மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் சேரலாம். டான்செட், சீட்டா, கேட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். தகுதியுள்ள மாணவர்கள் கேட் நுழைவுத் தேர்வு கல்வி உதவித் தொகை பெறலாம். அதி நவீன ஆய்வக வசதியும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியும் உள்ளன.

மேலும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இண்டர்ன்ஷிப் பயிற்சியும் பெறலாம். அதோடு, ஹூண்டாய், டிவிஎஸ், மஹீந்திரா, ஏதர், ரெனால்டு நிஸான், மாருதி சுசுகி, அசோக் லேலண்ட் டாட்டா மோட்டார்ஸ், டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜீஸ், கான்டினென்டல் ஆட்டோ மோட்டிவ் சிஸ்டம்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு வழங்க முன் வந்துள்ளன. கூடுதல் விவரங்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews