மே மாதம் சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பேரை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும்,
மேலும் இந்த முறையாவது மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் எனவும்,
14 ஆண்டு தற்காலிக வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.
உணவு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கடன் சுமையில் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் மீது முதல்வர் பரிவு காட்டி இந்த முறையாவது மே மாதம் சம்பளம் வழங்கினால் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்.
மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அரசு சலுகைகள் இல்லை என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மனது வைத்து தேர்தல் வாக்குறுதியை அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் தான் எதிர்காலம் கிடைக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.
முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என பட்ஜெட்டின்போது பள்ளிக்கல்வி அமைச்சர் சொன்ன பதிலை பகுதிநேர ஆசிரியர்கள் மலை போல் பெரிதும் நம்பி உள்ளார்கள்.
எனவே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் முதல்வர் உத்தரவிட வேண்டும்.
--
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல்: 9487257203
Search This Blog
Friday, May 16, 2025
Comments:0
Home
part time teacher post
மே மாதம் சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
மே மாதம் சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.