TET தேர்வில் தமிழக அரசு நிலைப்பாடு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 22, 2025

Comments:0

TET தேர்வில் தமிழக அரசு நிலைப்பாடு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு

IMG-20250320-WA0000


TET தேர்வில் தமிழக அரசு நிலைப்பாடு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு

அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி. தேவையில்லை என்ற முடிவு தமிழக அரசு எடுத்துள்ள நிலையில், 14 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. தமிழகத்தில் டி.இ.டி. நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, கல்வித்துறை சார்ந்த வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் அடிப்படையில், அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் 1500 பேர் நியமிக்கப்பட்டனர். அதே காலகட்டத்தில், இதே நிபந்தனைகளுடன் அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு டி.இ.டி. தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தற்போதைய தமிழக அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கிலும் அரசு இதையே தெரிவித்துள்ளது.

மேலும், 'பதவி உயர்விற்கும் டி.இ.டி. தேவையானது' என்ற நிபந்தனையை நீக்கும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்காக அரசு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. டி.இ.டி. நிபந்தனையால் பாதிக்கப்பட்ட 1500 சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

"ஏற்கனவே நியமிக்கப்பட்ட சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகளில் அரசு ஆதரவாக எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அதுபோல், 14 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் 1500 பேரின் நீண்ட கால கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். எதிர்வரும் பட்ஜெட்டில் இது தொடர்பாக அரசு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்." என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews