TNPSC - Counseling for the posts of Accounts Officer and Legal Officer on Feb. 19 TNPSC - கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் பதவிக்கு பிப்.19-ல் கலந்தாய்வு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் கொண்டது) பதவிகளில் அடங்கிய கணக்கு அலுவலர், சட்ட அலுவலர் மற்றும் இதர பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி (புதன்கிழமை) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி, நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தேர்வர்களும் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.