10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகித்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுடான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாணவர் களின் கற்றல் திறன், கற்பிக்கும் முறைகள், மாணவர்களின் வருகை, சிறப்பு வகுப்புகள், மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் தேவைகள், கோரிக்கைகள், தேர்ச்சி விகிதம், பள்ளி நேர பேருந்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, அரசு பள்ளி களில் மாணவர்களின் வருகை குறித்து நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். தேர்வில் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் கல்வியில் தனி கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் தனித்திறமைய கண்டறிந்து அதற்கேற்றவாறு கல்வி கற்பித்தல் வேண்டும். பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் தேர்வு விடைத்தாள்களில் நிறை, குறைகளை கண்டறிந்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவர்களின் முன்னேற்றத்திலும் ஆசிரியர்கள் அர்ப் பணிப்புடன் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
நடப்பாண்டு 10ம் வகுப்பில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி பேசினார். கூட்டத்தில், சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.