இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 08, 2024

Comments:0

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆக. 8 வரை அவகாசம் நீட்டிப்பு: சென்டாக் அறிவிப்பு

இளங்கலை மருத்துவப் படிப்புகள் (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நிா்வாகம் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுா்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 28 -ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஆக. 6) இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது.

மேலும், 1,300-க்கும் மேற்பட்டோா் வருவாய் சான்றிதழை சமா்ப்பிக்காமலும் உள்ளனா். ஆகவே, அவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில், வரும் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு, ரூ. 500, இதர பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.1,000, இதர பிரிவினா், பிற மாநில மாணவா்களுக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆா்.ஐ., பிரிவினருக்கு ரூ. 5,000 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி குடியுரிமையுள்ள மாணவா்கள் ரூ.20 க்கான இ.ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அந்த படிவத்தில் முதல் வாதியாக பெற்றோா் பெயரும், இரண்டாம் வாதியாக (பாா்ட்டி) கன்வீனா், சென்டாக் இடம் பெற வேண்டும். அதில் பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும்.

உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன் மாணவா் சோ்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு சென்டாக் மின்னஞ்சல் முகவரியிலும், 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews