சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்புக்கான சேர்க்கை: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதில் விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 31-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வித் தகுதி, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்." என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் படிப்புக்கு சுமார் 299 இடங்கள் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.