கிரேடு-3 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு – அரசிடம் கோரிக்கை!
ராஜஸ்தான் மாநில அரசு பள்ளி ஆசிரியர்கள் கிரேடு-3 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கை அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் கூடுதல் இளங்கலை பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் தெளிவு இல்லாததால், மாநிலத்தில் தரம்-3 ஆசிரியர்களுக்கு நேரடி பதவி உயர்வுகள் நடைபெறவில்லை. அதனால் கிரேடு-3 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், ஐந்தாண்டுகளாக கிடப்பில் உள்ள பதவி உயர்வு பணியை மீண்டும் துவக்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் 2016 மற்றும் 2018ம் ஆண்டு கிரேடு-3 ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தின் போது கூடுதல் பட்டம் பெற்றவர்கள் பணியமர்த்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் விபின் சர்மா இது குறித்து வெளியான அறிவிப்பில், கூடுதல் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது என்று துறையின் உத்தரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு விதியின் காரணமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
Search This Blog
Thursday, April 11, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.