கோடை வெயில் - இனி பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் - எந்த மாநிலத்தில் தெரியுமா?
கோடை காலத்தில் அரைநாள் வகுப்பு!
கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்களின் நலன்கருதி காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட உள்ளன
கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் நலன்கருதி காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட உள்ளன.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, இனி அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், 10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.