தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 82,000 மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை தகவல்!
அரசுப் பள்ளிகளில் கடந்த 8 நாட்களில் 80,076 மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்!
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி சேர்க்கை 82 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வரும் கல்வியாண்டில் ( 2024 - 25 ) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்னதாகவே சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டன. அத்துடன், அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேர்க்கை தொடங்கிய 6 நாட்களில் ( சனி, ஞாயிறு விடுமுறை தவிர்த்து ) 82,050 மாணவர்கள் பள்ளியில் சேர பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 10,411 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக சேலத்தில் 7,890 பேரும், கிருஷ்ணகிரியில் 7,770 பேரும் சேர்ந்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சம் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகள் நடப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது
கடந்த 5 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர் சேர்ப்பு - பள்ளிக்கல்வித்துறை தகவல்
கடந்த 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தத்தில் 5 லட்சம் பேரை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண் டும் என்ற இலக்கை நோக்கி பள்ளிக்கல்வித்துறை தீவிர மாக செயல்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில்…
அரசுப் பள்ளிகளில் மாண வர் சேர்க்கைப் பணிகள் வழக் கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப் பட்டு விட்டது. தனியார் பள் ளிகளுக்கு நிகரான வசதி களுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறையும் பல்வேறு திட் டங்கள், வசதிகளை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய் வகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், தொடக்கப் பள் ளிகளில் “ஸ்மார்ட் கிளாஸ் ரூம்” கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதவிர 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப் லெட்) வழங்கப்பட உள்ளது.
மாணவர் சேர்க்கை
இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை பள் ளிக்கல்வித்துறை முன்னெ டுத்து சென்று கொண்டிருக் கிறது. இதற்காக ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக் கப்பட்டுள்ளது. அந்தவகை யில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதில் அதிக பட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 365 மாணவர் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 லட்சம் இலக்கு
இதுமட்டுமல்லாமல், அங்கன்வாடி மய்யங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள் ளவும், 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசி ரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு இருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் இதுவரை 60,000 மாணவர்கள் சேர்க்கை
அரசுப் பள்ளிகளில் மார்ச் 1-ஆம் தேதி வரை இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற் றுள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணி கள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதா கவே தொடங்கப்பட்டுவிட்டது.
கடந்த 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாள்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60,000-க்கும் மேற் பட்ட குழந்தைகள் சேர்க்கை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,365 மாணவர் சேர்க்கப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்குமேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள் ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகை களை மேற்கொள்ளவும், 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
Search This Blog
Monday, March 11, 2024
Comments:0
Home
Admission
admission approval
Admission Guidelines
Admission in Government Schools
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 82,000 மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை தகவல்!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 82,000 மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை தகவல்!
Tags
# Admission
# admission approval
# Admission Guidelines
# Admission in Government Schools
Admission in Government Schools
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.