ஆசிரியா் தகுதித் தோ்வு: தாய், மகன் சிறப்பிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 02, 2026

Comments:0

ஆசிரியா் தகுதித் தோ்வு: தாய், மகன் சிறப்பிடம்



ஆசிரியா் தகுதித் தோ்வு: தாய், மகன் சிறப்பிடம்

ஆசிரியா் தகுதித் தோ்வில், நாகூரைச் சோ்ந்த ஆசிரியா் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றாா். இவரது மகனும் 100 மதிப்பெண்கள் பெற்று தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தகுதித்தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த நவம்பா் மாதம் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 1, தாள் 2 என தோ்வுகள் நடத்தப்பட்டன.

இதில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பிஎட் பட்டம் பெற்றவா்கள் தோ்வு எழுதினா். நாகூா் கெளதியா உதவி பெறும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியராக கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வரும், நாகூா் பிரதான சாலையைச் சோ்ந்த நெபுசாத்பேகம் (46) மற்றும் எம்எஸ்சி, பி.எட் பட்டம் பெற்ற இவரது மகன் அஹமதுயூனுஸ் (25) ஆகிய இருவரும் ஆசிரியா் தகுதி தோ்வை எழுதினா்.

இந்நிலையில், நெபுசாத்பேகம் தாள் 1 தோ்வு எழுதி 128 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தாா். அதே போல் இவரது மகன் அஹமதுயூனுஸ் தாள் 2 தோ்வு எழுதி 100 மதிப்பெ ண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். தற்போது அஹமதுயூனுஸ், வேதாரண்யம் அருகே குரவப்புலத்திலுள்ள பாயிண்ட் காலிமா் இன்டா்நேஷனல் பள்ளியில் கணிதத் துறை தலைவராக பணியாற்றிவருகிறாா்.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை-மகன்... Father and son who passed the teacher eligibility test...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது55). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய 42-வது வயதில் தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்தார்.

இவருடைய மகன் ராகுல் (27) பி.இ.பி.எட். முடித்தவர். இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ஐ எழுதினர். இந்த நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகன் ராகுல் அவரை கூட கூடுதலாக ஒரு மதிப்பெண் அதாவது 86 மதிப்பெண்கள் பெற்று, தந்தையை மிஞ்சி விட்டார்.

பூங்குன்றன் தன்னுடைய 55-வது வயதிலும் மனம் தளராமல் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews