+2 ஆங்கிலத் தேர்வு - நம் மாணவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்களே தவிர இங்கிலாந்தில் வசிக்கவில்லை!
,
நேற்று நடந்த +2 ஆங்கிலத் தேர்வு!
மனச்சோர்வு!
வினாத்தாள் வடிவமைப்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தையே மிஞ்சிவிட்டதாம்!
நம் மாணவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்களே தவிர இங்கிலாந்தில் வசிக்கவில்லை!
அடுத்தத் தேர்வுக்கு படிக்கமுடிமால்
மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்! ஆங்கில பாடத்திற்கு அப்பாற்பட்டதாய் வினாத்தாள் இருந்ததாக வேதனை தெரிவித்துள்ளனர்!
இது போன்ற நிலையிருந்தால் கல்விச்செல்வம் காணாமல் போகும்!
- ஆசிரியர் ஒருவரின் பதிவு
😡😡தேசிய ஆசிரியர் சங்கத்தின் கண்டனங்கள்😡😡😡😡😡😡😡😡😡😡இன்று நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வுவினாக்கள் மிகவும்கடினமாக கேட்கப்பட்டிருந்தது.பல மாணவர்கள் வினாவை புரிந்து கொள்ளவே சிரமப்பட்டார்கள். மேலும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே இயலாத ஒன்றாகும். இது போன்ற கேள்வியை தயாரித்த. குழுவை தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வன்மையாக கண்டிக்கின்றது. ஏழை எளிய மாணவர்கள் கிராமப்புற மாணவர்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் ஏதோ ஐஏஎஸ் தேர்வுக்கு கேள்வி தயாரிப்பது போல் தயாரித்துள்ளார்கள்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது எட்டிக்காய் போலத்தான் அவர்களும் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்வி செல்ல ஏதுவாக வினாத்தாளை வடிவமைத்திருக்க வேண்டும் ஆனால் கேள்வித்தாள் மிகக் கடினமாக உள்ளது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட்டு இனிவரும் காலங்களில் இது போன்ற கடினமான வினாத்தாளை தயாரிப்பதை தவிர்க்க ஆவன செய்யுமாறு தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு கேட்டுக்கொள்கிறது 💐💐💐💐💐💐💐💐
Search This Blog
Wednesday, March 06, 2024
Comments:0
Home
11th and 12th
12th
ASSOCIATION
Public Exam 2024
+2 ஆங்கிலத் தேர்வு - ஆசிரியர் சங்கத்தின் கண்டனங்கள்
+2 ஆங்கிலத் தேர்வு - ஆசிரியர் சங்கத்தின் கண்டனங்கள்
Tags
# 11th and 12th
# 12th
# ASSOCIATION
# Public Exam 2024
Public Exam 2024
Labels:
11th and 12th,
12th,
ASSOCIATION,
Public Exam 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.