ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 29, 2023

Comments:0

ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்

IMG-20231128-WA0042
ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழி முறைகள்!

பொது மருத்துவர் விஷால்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். அடுத்தவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

தொண்டை வலி இருந்தால் வெந்நீரில் உப்பு போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதும் நல்லது.

வைட்டமின்- சி மற்றும் புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

பொது மருத்துவர் விஷால்

முக்கியமாக வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துகொண்டால் நோய் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

இருமும்போதும் தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இன்ஃப்ளூயென்சா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை.

இருப்பினும் முதியோர், இதயநோய், HIV தொற்று, சர்க்கரைநோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேவைப்பட்டால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

IMG-20231128-WA0043

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews